தமிழகத்தில் ரூ.100 கோடி, பரிசுப்பொருட்கள் பறிமுதல்.. தேர்தல் பறக்கும்படை அதிரடி.!

தமிழகத்தில் தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2021-03-14 03:29 GMT

தமிழகத்தில் தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் வரை நடைபெற்ற சோதனையின் போது உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட 99 கோடியே 68 லட்சத்து 38 ஆயிரம் மதிப்புள்ள ரொக்கம், தங்கம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த சோதனையில் மதுபான பாட்டில்கள், சேலைகள் உள்ளிட்டவைகளும் அடங்கும். தமிழகம் முழுவதும் இது போன்ற சோதனைகள் தொடரும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பணம் வாங்காமல் நல்லது செய்யும் வேட்பாளர்களை தேர்வு செய்து ஜனநாயகத்தை காப்பாற்றுவது அனைத்து வாக்காளர்களின் கடமையும் ஆகும்.

Similar News