"தமிழ்நாட்டின் துரதிர்ஷ்டம் மு.க.ஸ்டாலின்" - அமைச்சர் விஜயபாஸ்கர் விளாசல்!

"தமிழ்நாட்டின் துரதிர்ஷ்டம் மு.க.ஸ்டாலின்" - அமைச்சர் விஜயபாஸ்கர் விளாசல்!

Update: 2020-11-11 08:51 GMT
காலம் காலமாக ஆளும் கட்சி, எதிர்கட்சி இடையிலான விமர்சனங்கள் நடந்த வண்ணம் உள்ளன. இது கட்சி பேதமின்றி சட்டசபையிலும், பொதுகூட்டங்களிலும், அறிக்கைகள் வாயிலாகவும் நடைபெறும் ஆனால் தமிழக அரசியல் வரலாற்றில் தற்போதைய எதிர்கட்சி தலைவரும், தி.மு.க தலைவருமாகிய ஸ்டாலின் வாங்கி வரும் விமர்சனங்களை இதுவரை எந்த அரசியல் கட்சி தலைவரும் வாங்கியதில்லை அந்தளவிற்கு தனது மோசமான செயல்பாடுகளால் ஸ்டாலின் அனைத்து தரப்பினரால் விமர்சிக்கப்பட்டு வருகிறார். ஆனால் அவர் தனது குறை கூறும் கீழ்த்தரமான அரசியல் போக்கை மாற்றிய பாடில்லை. அந்த வகையில் "தமிழ்நாட்டின் துரதிர்ஷ்டம் ஸ்டாலின்" என அமைச்சர் விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார்.

"மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு மரணம் குறித்து அவதூறு கருத்துகள் கூறிவரும் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்படும். மக்கள் மனதில் இடம்பிடிக்க வேண்டும் என்பதற்காக ஒருவர் இறப்பிலும், `அறிக்கை’ என்ற பெயரில் மலிவான அரசியல் செய்வது வேதனையாக இருக்கிறது" என்று ஆவேசமாகப் பேசியிருக்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியது, "ஸ்டாலின் அறிக்கை என்ற பெயரில் அநாகரிகமாக அரசியல் செய்கிறார்" என்றார்.

மேலும் பேசிய அவர், "அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு 40 சதவிகிதமாக இருந்த நுரையீரல் பாதிப்பு 90 சதவிதமாக அதிகரித்ததால் அவர் உயிரிழந்தார். அவருக்கு காவேரி மருத்துவமனையில் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்படியிருந்தும் அவர் உயிரிழந்தார். அவரின் மரணத்தில் ஸ்டாலின் யாரை குற்றம்சாட்டுகிறார் எனத் தெரியவில்லை. அரசியல் செய்வதற்கு எத்தனையோ விஷயங்கள் இருக்கும்போது அமைச்சரின் மரணத்தில் அரசியல் செய்கிறார். அநாகரிகமாகப் பேசுவது ஏற்புடையதல்ல. அன்பழகன், எஸ்.பி.பி., வசந்தகுமார் என யாராக இருந்தாலும் நேரிலும், வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமும் விசாரித்தோம்" என்றார்.

மேலும் தொடர்ந்த அவர், "துரைக்கண்ணு இறப்பில் மர்மம் இருக்கிறது எனக் கூறுவது எந்த வகையில் நியாயம் என தெரியவில்லை. எதிர்க்கட்சித் தலைவர், வார்த்தையை கவனமாகக் கையாள வேண்டும். இறப்பில் மர்மம் இருக்கிறது என அவர் பேசியது கண்டிக்கத்தக்கது. இதைவைத்து அரசியல் செய்கிறார். விஷத்தை அள்ளித் தெளிக்கிறார். அரசியல் செய்ய எத்தனையோ காரணங்கள் இருந்தபோதிலும், அமைச்சர் இறப்பில் அரசியல் லாபம் தேடும் எதிர்கட்சித் தலைவரை தமிழ்நாடு பெற்றிருப்பது நமக்கெல்லாம் துரதிர்ஷ்டம். அவருடைய இந்தச் செயல் கண்டிக்கத்தக்கது. மறைந்த அமைச்சரின் இறப்பின்மீது பொய்யான அறிக்கைகளை வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் மீது சட்டரீதியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்" என்று காட்டமாகவே பதிலளித்தார்.

Similar News