விழா மேடையில் அ.தி.மு.க அரசை புகழ்ந்த தி.மு.க எம்.எல்.ஏ - கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்!

விழா மேடையில் அ.தி.மு.க அரசை புகழ்ந்த தி.மு.க எம்.எல்.ஏ - கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்!

Update: 2020-11-12 09:06 GMT
தி.மு.க-வில் இதுவரை அதிருப்தியடைந்தவர்கள் சிலர் வெளியேறியுள்ளனர், பலரோ உள்ளூர புழுங்கி வெளியேற சமயம் பார்த்து வருகின்றனர். இன்னும் பலரோ தி.மு.க-வில் இருந்துக்கொண்டே ஆளும் அ.தி.மு.க அரசுக்கு ஆதரவாக பேச துவங்கிவிட்டனர். இதனால் ஏற்கனவே தான் வெற்றி பெறுவதை மக்களும் விரும்பவில்லை, தன்னுடைய ஜாதகத்திலும் இல்லை என கடுப்பில் சுற்றும் தி.மு.க தலைவர் ஸ்டாலினோ 'வெந்த புண்ணில் வெந்நீரை ஊற்றியது' போல் பரிதவித்து வருகிறார். இவரை இப்படி சமீபமாக தவிக்க விட்டது தி.மு.க எம்.எல்.ஏ. கே.வி. சேகரன்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தொகுதிக்கு உட்பட்ட ஒதலவாடியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதனை குத்து விளக்கு ஏற்றி தி.மு.க எம்.எல்.ஏ கே.வி.சேகரன் தொடங்கி வைத்தார். சர்க்கரை, ரத்த அழுத்தம், மார்பக புற்றுநோய், கண், பல்நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ துறை சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி மக்களை கவர்ந்தது.

அப்போது கே.வி.ஞானசேகரன் பேசியதுதான் ஹைலைட்டே, "வரும் முன் காப்பவன் தான் அறிவாளி என்பதற்கு இணங்க, தற்போதைய அரசு, மக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறது. அரசின் மக்கள் பயன்பாடு செயல்பாட்டை நாங்கள் வரவேற்போம். எம்.ஜி.ஆர்  ஒரு ஞானி. கருணாநிதியும் மக்களுக்கான கருத்தை எழுதியுள்ளார். இந்த அரசு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நாங்கள் எதிர்கட்சியாக இருந்தாலும், மக்கள் நலனுக்காக அ.தி.மு.க அரசு செய்யும் திட்டங்கள் அனைத்தையும் வரவேற்போம்" என தெரிவித்தார். எதிர்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவர் பொது மக்களிடையே நேரடியாக அ.தி.மு.க அரசைப் பாராட்டி பேசியிருப்பது தி.மு.க-வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிலும் தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கோ பேரதிர்ச்சியாக அமைந்தது.

இந்த சம்பவத்தை ஆதாரமாக வைத்து ஏற்கனவே இரு கோஷ்டியாக இருக்கும் திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க-வில் எதிர் கோஷ்டி இன்னும் குஷியாகி உள்ளது. இதனால், அவரது எதிர் கோஷ்டியைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, தி.மு.க வரும் சட்டசபை தேர்தலில், போளூர் தொகுதியை, கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கி விட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தி.மு.க-விற்கு குழி பறிக்க ஆட்கள் வெளியில் இருந்து யாரும் தேவையில்லை அவர்கள் கட்சி உடன்பிறப்புகளே போதும்.

Similar News