தன் கையில் உள்ள துண்டு சீட்டுக்கு விளக்கமளித்து உடன்பிறப்புகளுக்கு ஸ்டாலின் கடிதம்!

தன் கையில் உள்ள துண்டு சீட்டுக்கு விளக்கமளித்து உடன்பிறப்புகளுக்கு ஸ்டாலின் கடிதம்!

Update: 2021-01-28 08:32 GMT

"கையில் இருப்பது துண்டுச் சீட்டல்ல. இந்த ஆட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்துரைக்கும் துருப்புச் சீட்டு" என தான் துண்டுசீட்டு இல்லாமல் இருக்க முடியாது என்ற தோணியில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக 
"சொன்னதைச் செய்வோம் -  செய்வதைச் சொல்வோம்!” என்ற தலைப்பில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அதில், "குடியரசு என்பது மக்களால் – மக்களுக்காக - மக்களுடைய அரசு என்பது போல, தி.மு.கழகமும் மக்களால் – மக்களுக்காக - மக்களுடைய மாபெரும் இயக்கமாக, ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டுகாலமாக, தங்கு தடையின்றி, வெற்றிகரமாகப் பயணித்துக் கொண்டிருக்கிறது" முழுவதும் பிரச்சார நெடியில் எழுதப்பட்ட அக்கடிதத்தில் தனது துண்டுசீட்டு பற்றியும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

அதில், "பொய்களை மூட்டை கட்டிக் கொண்டு, அதனைப் பொதுமக்களிடம் அவிழ்த்துக் கொட்டி, பரப்புரை செய்யும் பழனிசாமியை யாரும் நம்பத் தயாராக இல்லை. ஆனால், ஆளுந்தரப்பினரைத் திரட்டி ஊர் ஊராகப் பரப்புரை செய்யும் முதலமைச்சர் பழனிசாமி, கிராம சபைக் கூட்டம் என்றால் மட்டும் கொரோனாவைக் காரணம் காட்டி தடை போடுகிறார். மக்களின் கேள்வியை எதிர்கொள்ள முடியாதே! அவர்களுடைய பாதையே ஒருவழிப் பாதைதானே! இதில், ஸ்டாலின் துண்டுச் சீட்டு இல்லாமல் என்னுடன் நேருக்கு நேர் வாதிட முடியுமா என சவடால் விடுகிறார். என் கையில் இருப்பது துண்டுச் சீட்டல்ல. இந்த ஆட்சியின் அவலட்சணங்களை மக்களிடம் எடுத்துரைக்கும் துருப்புச் சீட்டு என்பது சேக்கிழார் எழுதிய கம்பராமாயணத்தைப் படித்த அதிமேதாவி “ஆபிரகாம் லிங்கன்” பழனிசாமிக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை" என அ.தி.மு.க அரசிற்கு விமர்சிக்கும் விதமாகவும், தனது துண்டுச்சிட்டுக்கு தன்னிலை விளக்கம் அளிக்கும் விதமாகவும் அக்கடிதத்தை எழுதியுள்ளார்.

"தலைவர்கள் துண்டு சீட்டு வைத்து படிப்பது தவறல்லை ஆனால் துண்டு சீட்டு வைத்தும் தவறாக படித்து உளறுவதுதான் தவறு" அதை இன்னும் முத்தமிழறிஞரின் மகன் புரிந்துகொள்ளவில்லை என்பதே விமர்சகர்களின் கருத்து.

Similar News