புறக்கணிக்கப்பட்ட அந்தமானை முன்னேற்ற பாதையில் எடுத்துச் சென்றவர் பிரதமர் மோடி!
ஆண்டாண்டு காலமாக புறக்கணிக்கப்பட்ட அந்தமான் நிக்கோபார் தீவு கூட்டங்களை முன்னேற்ற பாதையில் எடுத்துச் சென்றவர் நமது பிரதமர் மோடி என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
அந்தமானில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுதை முன்னிட்டு தமிழர்கள் பகுதிகளில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றார். அங்குள்ள மக்களிடம் சென்று பாரத பிரதமர் மோடியின் திட்டங்களை எடுத்துக்கூறி தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகின்றார்.
ஆண்டாண்டு காலமாக புறக்கணிக்கப்பட்ட அந்தமான் நிக்கோபார் தீவு கூட்டங்களை முன்னேற்ற பாதையில் எடுத்துச் சென்றவர் நமது பிரதமர் @narendramodi அவர்கள்!
— K.Annamalai (@annamalai_k) February 26, 2022
அருமையான சுற்றுலா தளமாக மாற்றிக் காட்டியது, மத்திய அரசின் நேரடி பார்வையில் மக்களுக்கு கிடைத்த திட்டங்களையும்… pic.twitter.com/caQ3qpAgY9
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ஆண்டாண்டு காலமாக புறக்கணிக்கப்பட்ட அந்தமான் நிக்கோபார் தீவு கூட்டங்களை முன்னேற்ற பாதையில் எடுத்துச்சென்றவர் நமது பிரதமர் மோடி அவர்கள். அருமையான சுற்றுலா தளமாக மாற்றிக் காட்டியது, மத்திய அரசின் நேரடி பார்வையில் மக்களுக்கு கிடைத்த திட்டங்களையும், பாம்பூ பிளாட் ஜெட்டி தமிழர்கள் பெருவாரியாக வாழும் இந்த பகுதியில், தகவல் தொடர்பு, போக்குவரத்து, சுற்றுலா, உள்ளிட்ட பலதுறைகளில் முன்னேற்ற முனைப்பான திட்டங்களை தந்து கொண்டிருக்கும் பிரதமரின் கரத்தை வலுப்படுத்த தாமரை சின்னத்தில் வாக்கு கேட்டு வாக்காளரை சந்தித்தேன்! இவ்வாறு அவரது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Source, Image Courtesy: Twiter