50 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.. மீனவர்களுக்கு ஊக்கத்தொகை.. தமிழக பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியீடு.!

தமிழகத்தில் 50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் மீட்கப்பட்டு பட்டியலினத்த மக்களிடம் வழங்கப்படும் என்று தமிழக பாஜகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-03-22 13:45 GMT

தமிழகத்தில் 50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் மீட்கப்பட்டு பட்டியலினத்த மக்களிடம் வழங்கப்படும் என்று தமிழக பாஜகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக பாஜகவின் தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், மற்றும் முன்னாள் தேசிய செயலாளர் ராஜா, உள்ளிட்டோர் இன்று வெளியிட்டனர்.


 



அந்த அறிக்கையில், 50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். சென்னை 3 மாநகராட்சிகளாக பிரிக்கப்படும். தமிழகத்தில் மீண்டும் சட்ட மேலவை அமைக்கப்படும். 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் மீட்கப்பட்டு பட்டியலினத்தவர்களிடம் வழங்கப்படும். 8வது 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச டேப்லெட் வழங்கப்படும்.

மேலும், விவசாயத்திற்கு என்று தனி பட்ஜெட் அமைக்கபடும். வீடு தேடி ரேஷன் பொருட்கள் கொண்டு செல்லப்படும். தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக அரசு பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும்.


 



பூரண மது விலக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் போன்று மீனவர்களுக்கும் 6000 ரூபாய் ஊக்கத்தொகை தரப்படும். இது போன்று பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

Similar News