தமிழகம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் இன்று முதல் தொடக்கம்.!

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொதிகளுக்கும் அடுத்த மாதம் 6ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்குகிறது. அது மட்டுமின்றி கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

Update: 2021-03-12 03:31 GMT

அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளது. அவர்களுக்கான தொகுதிகளும் இறுதி செய்யப்பட்டு வேட்பாளர்களையும் அறிவிக்கப்பட்டுள்ளனர். பாஜகவை தவிர்த்து மற்ற கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து இன்று முதல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் மற்றும் புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் இன்று முதல் வேட்புமனுத்தாக்கல் தொடங்கப்படுகிறது. இதனால் தமிழகத்தில் தேர்தல் திருவிழா களை கட்டியுள்ளது.

Similar News