பென்னிக்ஸ், ஜெயராஜ் குடும்பத்திற்கு ஒரு கோடி கேட்ட தி.மு.க.. தற்போது ஆட்சியில் முருகேசன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குவது சரியா.!

இறந்தவர் குடும்பத்திற்கு ஒரு கோடி நிவாரணமும், ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

Update: 2021-06-24 04:18 GMT

சேலத்தில், போலீசார் தாக்கியதில் உயிரிழந்த முருகேசனின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சேலம், மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள இடையப்பட்டி என்ற கிராம். அந்த கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் மற்றும் அவரது நண்பர்கள் கள்ளக்குறிச்சி வரைக்கும் சென்று மது அருந்துவிட்டு மீண்டும் சொந்த ஊர் திரும்பியுள்ளனர். அப்போது கல்வாரயன்மலை வழியாக வீடு திரும்பியபோது, பாப்பநாயக்கன்பட்டி சோதனைச் சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் வியாபாரி முருகேசனை பிரம்பால் எஸ்.ஐ வெளுத்து வாங்கினார். இதில் படுகாயமடைந்து சாலையிலேயே அவர் மயங்கி விழுந்துவிட்டார். இதன் பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினார். முருகேசன் பின்புறம் தலையில பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சாலையில் போலீசார் கீழே தள்ளி தாக்குதல் நடத்தியதால்தான் அவர் உயிரிழந்தார் என அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர்.




 


இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். இறந்தவர் குடும்பத்திற்கு ஒரு கோடி நிவாரணமும், ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், போலீசார் அடித்துக்கொன்ற முருகேசன் குடும்பத்தாருக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சாத்தான்குளத்தில் தந்தை, மகன் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜை போலீசார் சிறையில் அடித்து சித்தரவதை செய்யப்பட்டதால் அவர்கள் இருவரும் உயிரிழந்தனர்.




 


இந்த சம்பவத்துக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்கள் தெரிவித்தது மட்டுமின்றி, இறந்தவர்கள் குடும்பத்திற்கு உடனடியாக ஒரு கோடி வழங்க வேண்டும் எனவும் அரசுப்பணி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.

அப்போது ஒரு கோடி கேட்டவர்கள் ஆட்சியில் வந்த உடன் ரூ.10 லட்சம் வழங்குவது நியாயமா. உடனடியாக இவர்களும் முருகேசன் குடும்பத்துக்கு ஒரு கோடி வழங்க வேண்டும் இல்லையா என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Similar News