தமிழகம், புதுச்சேரியில் இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை.!

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த மாதம் 6ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கி நேற்று வரை நீடித்தது.

Update: 2021-03-20 04:59 GMT

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த மாதம் 6ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கி நேற்று வரை நீடித்தது.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்களும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு 23 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது.


 



234 தொகுதிகளுக்கும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் குவிந்துள்ளன. 6 ஆயிரத்துக்கும் அதிகமான ஆண்களும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களும், 3 திருநங்கைகளும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அதே போன்று புதுச்சேரியில் 30 சட்டமன்ற தொகுதிக்கு 481 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.




 


இந்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடங்குகிறது. திங்கட்கிழமை வரை வேட்புமனுக்களை திரும்பபெறலாம். அன்றைய நாள் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

Similar News