அம்மா உணவகத்தில் உணவு வழங்க காங்கிரஸ் எம்.எல்.ஏ., நிதியுதவி.!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிகத்தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்த காலகட்டத்தில் அம்மா உணவகம் முழுயை£க செயல்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

Update: 2021-05-18 13:09 GMT

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிகத்தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்த காலகட்டத்தில் அம்மா உணவகம் முழுயை£க செயல்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இதனை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொழிலதிபர்கள் நன்கொடையாளர்கள் பலர் இலவசமாக உணவு வழங்குவதற்கு தங்களால் முடிந்த நிதியுதவியை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், தென்காசி அரசு மருத்துவமனை அருகே புதிய பேருந்து நிலையத்தில் அம்மா உணவகம் இயங்கி வருகிறது. அந்த உணவகத்தில் 19ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை உணவு வழங்க தென்காசி எம்.எல்.ஏ., பழனி நாடார் 82,830 ரூபாய்கான காசோலையை தென்காசி நகராட்சி ஆணையாளர் பாரிஜானிடம் வழங்கியுள்ளார்.

Similar News