தமிழ் மொழிக்கு மிகப்பெரிய இழப்பு.. தினகரன் ட்விட்.!

தமிழ் மொழிக்கு மிகப்பெரிய இழப்பு.. தினகரன் ட்விட்.!

Update: 2020-11-17 16:28 GMT

தமிழ்ப் பதிப்புலகத்தின் முக்கிய ஆளுமையான ‘க்ரியா’ பதிப்பகம் ராமகிருஷ்ணன் கொரோனா தொற்றுக்கு பதிப்பாகி இன்று காலை உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டு வருகின்றனர். இவரது மறைவுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ் பதிப்புலகில் தனித்துவமான ஆளுமையாக திகழ்ந்த திரு.க்ரியா ராமகிருஷ்ணன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்த வருத்தமடைந்தேன். ராமகிருஷ்ணன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். ராமகிருஷ்ணன் அவர்களின் மறைவு தமிழ் பதிப்புலகத்திற்கும், தமிழ் மொழிக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.


நவீன யுகத்திற்கு ஏற்ப தமிழுக்கான சொற்களைத் தேடித்தேடி சேகரித்து அவர் வெளியிட்ட அகராதிகளும், மேற்கொண்ட தமிழ்ப்பணிகளும் எப்போதும் மறையாதவை. திரு.ராமகிருஷ்ணன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Similar News