ஐதராபாத் உள்ளாட்சி தேர்தலில் NOTA-விடம் வாங்கிக்கட்டிக் கொண்ட கம்யூனிஸ்டுகள் - வெறும் 0.17% வாக்குகளுடன் பரிதாபம்!

ஐதராபாத் உள்ளாட்சி தேர்தலில் NOTA-விடம் வாங்கிக்கட்டிக் கொண்ட கம்யூனிஸ்டுகள் - வெறும் 0.17% வாக்குகளுடன் பரிதாபம்!

Update: 2020-12-05 11:45 GMT

ஐதராபாத் உள்ளாட்சி தேர்தல் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி நடைபெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கை நேற்று(டிசம்பர் 4) நடைபெற்றது. 150 கவுன்சிலர்களில் 99 இடங்களைப் பெற்று அசுர பலத்துடன் இருந்த ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி வெறும் 55 இடங்களில் வென்றது.

பா.ஜ.க 4 இடங்களில் இருந்து 49 இடங்களை வென்று எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சி கடந்த முறை வென்ற அதே 2 இடங்களை மட்டுமே வென்று பரிதாப நிலைக்கு சென்றது.

இத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் போட்டியிட்டன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 17 இடங்களில் பேட்டியிட்டு வெறும் 3,439 வாக்குகளை மட்டுமே பெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ 12 இடங்களில் போட்டியிட்டு சொற்பம் 2,771 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. ஆக, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் சேர்ந்து வெறும் 6,210 வாக்குகளை பெற்றது. ஆனால் ஐதராபாத் உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் வாக்குகள் பதிவாகின.

இதன் விகிதாச்சார கணக்கை எடுத்துக் கொண்டால் கம்யூனிஸ்டுகளின் மொத்த வாக்கு சதவீதம் 0.17% தான்.

ஆனால், இத்தேர்தலில் NOTA -  29,076 வாக்குகளை பெற்றுள்ளது. ஆக, அதன் விகிதாச்சாரம் 0.84% ஆகும்.

இதன்மூலம், டெல்லி, உத்திர பிரதேசம், பீகார் மாநிலங்களை தொடர்ந்து தெலங்கானாவிலும் நோட்டாவிடம் தோற்றுப்போயுள்ளது கம்யூனிஸ்டு கட்சி.

Similar News