வேல் யாத்திரைக்கு போட்டியாக தி.மு.க எம்.எல்.ஏ விளக்கு பூஜை - ஆட்டம் காணும் தி.மு.கவின் அஸ்திவாரம்.!

வேல் யாத்திரைக்கு போட்டியாக தி.மு.க எம்.எல்.ஏ விளக்கு பூஜை - ஆட்டம் காணும் தி.மு.கவின் அஸ்திவாரம்.!

Update: 2020-11-06 09:33 GMT

தி.மு.க, வி.சி.க மற்றும் ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் இந்து எதிர்ப்பு போக்கை கண்டித்தும், மக்களிடையே இந்தக் கட்சிகளின் போலி மதச்சார்பின்மையை தோலுரித்துக் காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக பா.ஜ.க வேல் யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளது. நவம்பர் 6ஆம் தேதி முதல் டிசம்பர் 6ஆம் தேதி வரை நடக்கும் இந்த யாத்திரை திருத்தணி முருகன் கோவிலில் தொடங்கி திருச்செந்தூர் முருகன் கோவிலில் முடிவடைகிறது. இதன் நோக்கத்தை அறிந்த திராவிடக் கட்சிகள் தங்கள் முகத்திரையைக் காப்பாற்றிக் கொள்ளவும் பா.ஜ.கவுக்கு மக்கள் ஆதரவு அதிகரிப்பதைத் தடுக்கவும் யாத்திரைக்கு பல்வேறு முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தி வருகின்றன.

 

இது பா.ஜ.கவின் செல்வாக்கு அதிகரித்து விடுமோ என்ற அச்சத்தையே காட்டுகிறது என்பதை நிரூபிக்கும் வகையில் நடந்திருக்கிறது ஒரு நிகழ்வு. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜைக்கு சென்ற தி.மு.க தலைவர் ஸ்டாலின் விபூதியைக் கீழே கொட்டி அவமதித்து விட்டு வந்தார். ஆனால் அவரது தொண்டர் ஒருவர் இந்துக்களின் வாக்குகளைக் கவர் வேல் யாத்திரைக்கு போட்டியாக விளக்கு பூஜை நடத்தி இருக்கிறார். தி.மு.க சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும் துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏவுமான சேகர் பாபு தான் அது.

 

அ.தி.மு.கவில் இருந்து தி.மு.கவுக்கு வந்த சேகர் பாபு தெய்வ பக்தி கொண்டவர் என்று கூறப்படுகிறது. எனினும் அவரது சுறுசுறுப்பான செயல்பாட்டால் தி.மு.க தலைமை அவருக்கு மாவட்ட பொறுப்பு வழங்கியதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்கான பணிகளை இப்போதே தொடங்கி விட்ட சேகர் பாபு கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் இந்துக்கள் என அனைத்து மதத்தினரும் குறிப்படத்தக்க அளவில் இருக்கும் தொகுதி என்பதால் அனைத்து தரப்பினரையும் ஈர்க்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறாராம்.

 

இதன் ஒரு பகுதியாக தி.மு.கவுக்கு கிடைத்திருக்கும் இந்து விரோதக் கட்சி என்ற இமேஜால் தனது வெற்றி வாய்ப்புகள் பறிபோகக் கூடாது என்று பா.ஜ.கவின் வேல் யாத்திரைக்கு போட்டியாக தனது தொகுதியில் விளக்கு பூஜை நடத்தி வருவதாக சமூக ஊடகங்களில் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இது தி.மு.கவின் கொள்கையை தலைமையின் குடும்பமே மதிக்காத போது அதன் உறுப்பினர்கள் மட்டும் எப்படி மதிப்பார்கள் என்ற விமர்சனத்தை எழுப்பி இருக்கிறது.

Similar News