பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய திருநாடு வெள்ளையர் ஏகாதிபத்தியத்திலிருந்து விடுதலை பெற்று 75ம் ஆண்டு தொடங்குகிறது. சுதந்திர இந்தியாவில் நாமெல்லாம் தலை நிமிர்ந்து வாழ்வதற்கு வழி ஏற்படுத்திய தியாகத்தலைவர்களின், தியாக உள்ளங்களின் வீரச்சரித்திரத்தை நினைவு கூற வேண்டிய நாள் இந்த நாள் அவர்களின் தியாகத்தை போற்ற வேண்டிய நாள் இந்த நாள்.;

Update: 2021-08-14 11:27 GMT

தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய திருநாடு வெள்ளையர் ஏகாதிபத்தியத்திலிருந்து விடுதலை பெற்று 75ம் ஆண்டு தொடங்குகிறது. சுதந்திர இந்தியாவில் நாமெல்லாம் தலை நிமிர்ந்து வாழ்வதற்கு வழி ஏற்படுத்திய தியாகத்தலைவர்களின், தியாக உள்ளங்களின் வீரச்சரித்திரத்தை நினைவு கூற வேண்டிய நாள் இந்த நாள் அவர்களின் தியாகத்தை போற்ற வேண்டிய நாள் இந்த நாள்.

இன்று இந்தியா உலக அரங்கில் வீறுகொண்டு எழுந்துள்ளது. வெளியுறவு தேச பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, நவீனம், டிஜிட்டல், போக்குவரத்து, தொலைத்தொடர்பு, சுகாதாரம் மக்கள் நலன் என அனைத்து துறைகளிலும், நமது பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் உலகமே வியக்கும் சாதனைகளை புரிந்து வருகிறது. 


கொரோனாவை முற்றிலும் ஒழிந்து உலகிலேயே அதிக மக்களுக்கு தடுப்பூசி போட்டுள்ள நாடாக இந்தியா விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. நாம் அனைவரும் இந்தியர்கள் என்று பெருமைப்படும் உயர்ந்த நிலைக்கு நம் நாடு சென்று கொண்டிருக்கிறது. எதிர்கால இந்தியா மட்டுமல்ல, உலகமே இளைஞர்கள் கையில் அவர்களின் சிந்தனையால் செயல்பாடுகளால், நவீன கண்டுபிடிப்புகளால் நம் நாட்டை மேலும், மேலும் உயர்த்துவோம். பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்போம்.

வாழ்க பாரதம், வளர்க தமிழகம்.

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source: Bjp

Image Courtesy: Bjp

Tags:    

Similar News