ஊரக உள்ளாட்சித் தேர்தல்! வேட்பு மனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள்!

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய நாட்களில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது.

Update: 2021-09-25 03:45 GMT

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய நாட்களில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது.

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 15ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடைபெற்றது.

வேட்புமனு பரிசீலனை கடந்த 23ம் தேதி நடைபெற்றது. இதனிடையே வேட்புமனுக்களை திரும்பப் பெற இன்று (செப்டம்பர் 25ம் தேதி) கடைசி நாள் ஆகும். இன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதனிடையே தேர்தலில்  போட்டியிடும் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன .

Source: News 18 Tamilnadu

Image Courtesy:Zee News


Tags:    

Similar News