திமுக-காங்கிரஸ் கூட்டணியில் பூசல்!! 2006 தேர்தலை சுட்டிக்காட்டிய காங்கிரஸ் எம்.பி!!
By : Bharathi Latha
Update: 2026-02-13 13:22 GMT
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் பூசல். தொகுதிப் பங்கீடு பேசக் குழு அமைக்காததால் காங்கிரஸ் வருத்தம். பதிலுக்கு, ஆட்சி அதிகாரத்தில் பங்கு தமிழ்நாட்டில் ஒத்து வராது என முதல்வர் ஸ்டாலின் கருத்து.
இதற்கு காங். எம்.பி மாணிக்கம் தாகூர், 2006 தேர்தலை சுட்டிக்காட்டி பதில் அளித்துள்ளார். 2006-ல் மக்கள் தீர்ப்பை செயல்படுத்தாதது காங்கிரஸ் தவறு என்று கூறியுள்ளார். அப்போது திமுக 96 இடங்களில் வென்று, காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.
2006-ல் கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் பங்கு கேட்டிருந்தால் திமுக என்ன செய்திருக்கும் என்பது கேள்விக்குறி. அப்போது மத்தியில் காங்கிரஸ் அரசில் திமுக இடம் பெற்றிருந்ததால், காங்கிரஸ் அமைதியாக இருந்துவிட்டது.