டிரம்பே அதிபராக நீடிக்க வேண்டும்.. சாலைக்கு வந்த ஆதரவாளர்கள்.!

டிரம்பே அதிபராக நீடிக்க வேண்டும்.. சாலைக்கு வந்த ஆதரவாளர்கள்.!

Update: 2020-11-15 12:08 GMT

அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை முன்பு ஆயிரக்கணக்கான மக்கள் டிரம்புக்கு ஆதரவாக போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அமெரிக்காவில் கடந்த நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். அவருடன் போட்டியிட்டு தோல்வியடைந்த டிரம்ப், தேர்தலில் விதிமீறல்கள் நடந்ததாக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றார்.

அதிபர் தேர்தலை பொறுத்தவரையில் வெற்றியை தீர்மாணிக்கும் முக்கிய மாகாணங்களாக கருதப்படும் பென்சில்வேனியா, மிச்சிகன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்த வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்துள்ளதாக ட்ரம்ப் குற்றம்சாட்டினார்.

இது பற்றி வழக்கு தொடரபோவதாகவும் கூறியிருந்தார். ஆனால் அந்த மாகாண அரசுகள் எந்த ஒரு விதிமீறல்களும் நடைபெறவில்லை. தேர்தல் முறையாக நடத்தி முடிக்கப்பட்டு, அறிவிப்புகள் வெளியிடப்பட்டது என தெரிவித்துள்ளது. ஆனால் இதனை ஏற்க ட்ரம்ப் மறுத்து விட்டார்.

ஒரு புறம் ஜோ பைடனின் வெற்றியை ஜனநாயக கட்சி ஆதரவாளர்கள் கொண்டாடி வரும் நிலையில், மறுபுறம் டிரம்ப் ஆதரவாளர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். தேர்தலில் வெளிப்படைத் தன்மை இல்லை என ட்ரம்ப் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையின் முன்பு ஆயிரக்கணக்கானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது, எனவே எங்களது அதிபரே மீண்டும் தொடர வேண்டும் எனவும் கோஷம்மிட்டு வருகின்றனர். 

மேலும், வாக்குகளை திருடுவதை நிறுத்துங்கள், இன்னும் நான்கு ஆண்டுகள், நாங்கள் டிரம்பை விரும்புகிறோம் என்பவ போன்ற பதாகைகளை ஏந்தி சென்றனர். இந்த நிகழ்வுக்கு முன்னதாக அந்த வழியே சென்ற ட்ரம்ப் தனது ஆதரவாளர்களிடம் கைகளை காட்டி ஆதரவு தெரிவித்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Similar News