உதயநிதி டிஜிபியை மிரட்டினார்.. தற்போது மாவட்ட பொறுப்பாளர், டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டரை மிரட்டும் வீடியோ வெளியாகியுள்ளது.!

உதயநிதி டிஜிபியை மிரட்டினார்.. தற்போது மாவட்ட பொறுப்பாளர், டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டரை மிரட்டும் வீடியோ வெளியாகியுள்ளது.!

Update: 2020-11-27 13:36 GMT

திருவள்ளூர் மாவட்ட கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் டி.கே.கோவிந்தராஜ் போலீஸ் அதிகாரிகள் மற்றும் இன்ஸ்பெக்டர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசிய சம்பவம் காவல்துறையினரிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சில நாட்களுக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், 100 நாள் பிரச்சாரத்தை திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் தொடங்கினார். இதன் பின்னர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்தார்.


அந்த சமயத்தில் தமிழக காவல்துறையின் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸூக்கு உதயநிதி ஸ்டாலின் வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்தார். சில மாதங்களில் திமுக ஆட்சி வரும். அப்போது பார்த்துக்கொள்கிறோம் என கூறினார். இது திமுகவினர் மத்தியில் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் பயத்தை ஏற்படுத்தியது. ஆட்சி அதிகாரம் வரவே இல்லை அதற்குள் இப்படி மிரட்டல் விடுவதா என பொதுமக்கள் பேசிக்கொண்டனர்.


இந்நிலையில், உதயநிதி சர்ச்சை முடிந்து அடுத்த சர்ச்சையை திமுக மாவட்ட பொறுப்பாளர் ஆரம்பித்து வைத்துள்ளார். பொன்னேரியில் நடந்த திமுக கூட்டத்தில் அம்மாவட்ட பொறுப்பார் டி.கே.கோவிந்தராஜ் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: விரைவில் திமுக ஆட்சி வரும். அப்போது நாம் எது வேண்டுமானாலும் செய்வோம். அதற்கு ஏற்றார் போன்று டி.எஸ்பி., தாசில்தார், இன்ஸ்பெக்டர், பிடிஓ கேட்க வேண்டும்.


அப்படி கேட்கவில்லை என்றால் அவர்களை நாம் சிறந்த முறையில் கவனித்து கொள்வோம். இவ்வாறு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியுள்ளார். இது பொதுமக்களிடையே பயத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரையே மிரட்டினால் அப்பாவி பொதுமக்களின் நிலைமை என்னாகும் என்ற கேள்வி குறியாக உள்ளது.

இது போன்றவர்களை அடக்க வேண்டும் என்றால் மீண்டும் திமுக ஆட்சிக்கு வரவிடமால் தடுக்கும் பணியில் மக்கள் ஈடுபட வேண்டும் என்பது அனைவரின் குரலாகும்.

Similar News