ரஜினிகாந்த் கட்சிக்கு வாழ்த்து கூறிய உதயநிதி ஸ்டாலின்.!

ரஜினிகாந்த் கட்சிக்கு வாழ்த்து கூறிய உதயநிதி ஸ்டாலின்.!

Update: 2020-12-11 19:46 GMT

தி.மு.க தலைவர் ஸ்டாலினின் மகனும், தி.மு.க இளைஞரணி செயலாளருமாகிய உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் கட்சி அறிவிப்பை வெளியிட்டுள்ள திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இன்று மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய உதயநிதி அவர்கள் திரு.ரஜினிகாந்த் அவர்களின் கட்சி துவக்கம் பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கையில்  கூறியதாவது, "ரஜினிகாந்த் கட்சி துவக்கம் பற்றி தற்பொழுது ஏதும் கூற இயலாது, அவர் கொள்கை மற்றும் கட்சி விவரங்களை அறிவித்த பிறகு கருத்து  கூறலாம்" என்றார். மேலும் "கட்சி துவங்கிய ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்துக்கள் என்றார்.

மேலும் ஸ்டாலின் உடல்நிலை பற்றிய கேள்விக்கு பதிலளிக்கையில், "தலைவர் நலமாக உள்ளார். இன்றைய ஓய்விக்கு பிறகு நாளை மீண்டும் கட்சி பணிகளை கவனிக்க உள்ளார்" என்றார்.

Similar News