ம.தி.மு.க.வுக்கு 4 தொகுதிகள்.. இல்லைனா இதயத்தில்தான் இடமாம்.? அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த வைகோ.!

திமுக கூட்டணியில் மதிமுக கட்சிக்கு 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அடுத்த கட்ட நடவடிக்கையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஈடுபட்டுள்ளார்.

Update: 2021-03-06 05:37 GMT

திமுக கூட்டணியில் மதிமுக கட்சிக்கு 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அடுத்த கட்ட நடவடிக்கையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஈடுபட்டுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக கட்சிகள் கூட்டணியை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. முதலில் அதிமுக, பாஜக, தமாகா மற்றும் பாமகவுடன் கூட்டணியை உறுதி செய்துவிட்டது. இதனால் கூட்டணி சுமூகமாக முடியும் நிலையில் உள்ளது.


 



ஆனால் திமுகவில் அப்படி இல்லை. 2 கம்யூனிஸ்ட் கட்சிகளும், மதிமுகவும் போட்டி போட்டு வருகிறது. நாங்கள்தான் பெரிய கட்சி, இல்லை.. இல்லை.. நாங்கள் தேசிய கட்சி என்று மார்தட்டி வருகின்றது. இந்நிலையில், திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 2 கட்ட பேச்சு வார்த்தை நடந்தும் உடன்பாடு எட்டப்படவில்லை.

மதிமுக தரப்பில் 10 தொகுதிகள் கேட்பதாகவும், இதனை திமுக நிராகரித்து விட்டதாக தெரிகிறது. மேலும், 4 தொகுதிகளை வாங்கினால் வாங்கிக்கோங்க இல்லை என்றால் மீண்டும் உங்களுக்கு இதயத்தில் மட்டுமே இடம் ஒதுக்க முடியும் என்ற நிலைக்கு திமுக சென்று விட்டதாக கூறப்படுகிறது.


 



இதனை கேள்விப்பட்ட வைகோ அதிர்ச்சியடைந்துள்ளார். இதனால் அவசரமாக மதிமுக கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டத்தை கூட்டியுள்ளார். இதில் 4 தொகுதிகளை ஏற்கலாமா? அல்லது கூட்டணியை விட்டு வெளியேறலாமா என்பன ஆலாசிக்கப்படும். விரைவில் திமுகவில் இருந்து வைகோ வெளியேறி கமல் கட்சி அமைத்துள்ள 3ம் அணிக்கு செல்லவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Similar News