இந்துமுன்னணி நிர்வாகி மீது கொலை மற்றும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வி.சி.க நிர்வாகி நேற்று கைது செய்யப்பட்டார் !

Update: 2021-10-24 07:44 GMT

இந்துமுன்னணி நிர்வாகிக்கு கொலை மற்றும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த  விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி நேற்று பெரம்பலூரில்  கைது.  

பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து இந்து  கடவுளர்  சிலைகளை மற்றும் கோயில்கள்  உடைக்கப்படுவதைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக அந்த  பகுதிகளில் இந்து முன்னணி அமைப்பினர் துண்டுப் பிரசுரங்கள் மற்றும்  சுவரொட்டிகளை ஒட்டி பொது மக்களிடம் ஆதரவு திரட்டினர்.    

இந்நிலையில் இந்து முன்னணியின் திருச்சி கோட்ட பொறுப்பாளர்  குணசேகரனுக்கு, மர்ம நபர் ஒருவர்  தொலைபேசி வாயிலாக  "இந்த ஆர்ப்பாட்டத்தை பெரம்பலூர் மாவட்டத்தில் நடத்தக்கூடாது என்றும், மீறினால்  பெட்ரோல் வெடிகுண்டு வீசி கொலை செய்து விடுவேண்" என்று   பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்தார்.இந்நிலையில், பெரம்பலூர் மற்றும் அரும்பாவூர், காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் குறித்தும், நடவடிக்கை எடுக்கக்  கோரியும்  இந்துமுன்னணி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, காவல் துறை தீர விசாரித்ததில் விடுதலை சிறுத்தை கட்சி  நிர்வாகி செல்வராஜ். என்பவர் தான் இந்த கொலை மிரட்டல் விடுத்தார் என்பது தெரியவந்தது. பின்னர்  நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.

சமீப காலமாக தமிழகத்தில் வலது சாரி சிந்தனை கொண்டவர்களையும், இந்து மத செயற்பாட்டாளர்கள் மீதும் தாக்குதல்கள் நடந்தேறுவது  வழக்கமாக ஆகிவிட்டது. 

Hindu Munnani

Tags:    

Similar News