வி.சி.க மாநில, மாவட்ட தலைவர்கள் பா.ஜ.கவில் ஐக்கியம்.!

வி.சி.க மாநில, மாவட்ட தலைவர்கள் பா.ஜ.கவில் ஐக்கியம்.!

Update: 2020-11-05 20:14 GMT

பெரியாரிய அமைப்புகள் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மனுதர்ம சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறி இந்து பெண்களை இழிவுபடுத்தும் விதமாக விபச்சாரிகள் என்று அழைத்தது அனைத்து தரப்பினரிடமும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எனினும் மனுதர்ம சாஸ்திரத்தை தீயிட்டுக் கொளுத்துவோம் என்று வி.சி.க போராட்டங்களை நடத்தியதோடு இந்த போராட்டத்திற்கு பொது மக்களிடையே பெருத்த ஆதரவு கிடைத்துள்ளதாக கூறிவந்தது.

 

ஆனால் திருமாவளவனின் இந்த அருவருக்கத்தக்க பேச்சுக்குப் பின்னர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்களே அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்து வருகின்றனர். கடந்த வாரம் விடுதலை சிறுத்தைகள் கட்சி திருப்பூர் நகர அவைத் தலைவர் மாரியப்பன் உள்ளிட்ட 30 பெயர் பா.ஜ.க மாநில துணைத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். அதே நிகழ்ச்சியில் திமுகவைச் சேர்ந்த ஏழு பேரும் பா.ஜ.கவில் இணைந்தனர். அதே போல் திருமாவளவனின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்க தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது மட்டும் எதிர்ப்பு தெரிவித்து திருமாவளவனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது தி.மு.கவில் உள்ள இந்துக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

இந்நிலையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஈரோடு மாவட்ட செயலாளர் பாஸ்கர் மற்றும் வி.சி.க மாநில இளைஞரணி செயலாளர் வெங்கடேஷ், திண்டுக்கல் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் பாஸ்கரன், மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஓ.பி.சி அணி மாவட்ட தலைவர் ஹரி கிருஷ்ணன் உள்ளிட்டோர் மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் பா.ஜ.கவில் இணைந்துள்ளனர். இதில் திருமாவளவன் ஈரோட்டில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு வந்த போது பா.ஜ.க மற்றும் வி.சி.கவினர் இடையே மோதல் ஏற்பட்டது தற்போது இணைந்துள்ள ஈரோடு மாவட்ட வி.சி.க செயலாளர் பாஸ்கரின் இல்லத் திருமணத்துக்கு சென்ற போது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News