விருகம்பாக்கம் தி.மு.க. வேட்பாளருக்கு எதிர்ப்பு.. கூண்டோட ராஜினாமா செய்யும் உடன் பிறப்புகள்.!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான 173 வேட்பாளர் பட்டியலை திமுக வெளியிட்டது. அதில் கட்சியில் உழைத்தவர்களுக்கு சீட் தராமல் பணத்தை கொடுப்பவர்களுக்கு மட்டுமே சீட் வழங்கப்பட்டதாக திமுக உடன்பிறப்புகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

Update: 2021-03-12 12:43 GMT

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான 173 வேட்பாளர் பட்டியலை திமுக வெளியிட்டது. அதில் கட்சியில் உழைத்தவர்களுக்கு சீட் தராமல் பணத்தை கொடுப்பவர்களுக்கு மட்டுமே சீட் வழங்கப்பட்டதாக திமுக உடன்பிறப்புகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

அந்த வகையில் சென்னை, விருகம்பாக்கம் தொகுதியின் வேட்பாளராக பிரபாகர் அறிவிக்கப்பட்டார். இவரது அறிவிப்புக்கு திமுக மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கடந்த முறை அந்த தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் மீது புகார்களை அடுக்கி வருகின்றனர்.

மேலும் வேட்பாளரை உடனே மாற்ற வேண்டும் என்று, விருகம்பாக்கம் தொகுதியை சேர்ந்த 80 சதவீதம் நிர்வாகிகள் ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளனர். இதனால் அண்ணா அறிவாலயம் அதிர்ச்சியடைந்துள்

இதே போன்றுதான் தமிழகம் முழுவதும் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களின் நிலைமையும், பணத்தை கொடுத்து சீட்டை பெற்று விட்டனர். ஆனால் திமுவில் இருக்கும் உடன்பிறப்புகளுக்கு ரூ.200 கொடுத்தால் போதும் என்று தங்களது பணிகளை செய்கின்றனர். இவர்கள் திருந்தினால்தான் திமுக என்ற குடும்ப கட்சி விலகும் என்பது நிதர்சனமான உண்மை.

Similar News