கூட்டணி கட்சிகளை கூல் செய்ய துவங்கிய ஸ்டாலின்! தோல்வி பதற்றத்தின் வெளிப்பாடா?

கூட்டணி கட்சிகளை கூல் செய்ய துவங்கிய ஸ்டாலின்! தோல்வி பதற்றத்தின் வெளிப்பாடா?

Update: 2021-01-20 16:17 GMT

வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க உடனான கூட்டணிக்கு காங்கிரஸ், ம.தி.மு.க, வி.சி.க போன்ற கட்சிகள் காத்துக்கொண்டிருக்கும் நிலையில் தி.மு.க தலைமையோ 200 தொகுதிகளில் தி.மு.க, கூட்டணி கட்சிகளுக்கு தி.மு.க சின்னத்தில் நிற்க மட்டுமே அனுமதி என கறார் காட்டி வந்தது. ஆனால் தற்பொழுதைய கள நிளவரங்கள் ஏதும் தி.மு.க'விற்கு சாதகமாக இல்லாத காரணத்தினால் தற்பொழுது கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்லும் நிலைக்கு ஸ்டாலின் தள்ளப்பட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக, "தி.மு.க கூட்டணி என்பது எண்ணிக்கை அடிப்படையில் அமைந்த கூட்டணி அல்ல, ஒருமித்த எண்ணங்கள் அடிப்படையிலான கூட்டணி, கொள்கை சார்ந்த கூட்டணி" என கூட்டணி கட்சிகளை கூல் செய்யும் காரியத்தில் இறங்கியுள்ளார்.

ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த ஸ்டாலின் கூறுகையில், "தி.மு.க கூட்டணி என்பது எண்ணிக்கை அடிப்படையில் அமைந்த கூட்டணி அல்ல, ஒருமித்த எண்ணங்கள் அடிப்படையிலான கூட்டணி, கொள்கை சார்ந்த கூட்டணி என கூறியுள்ளார். கூட்டணி கட்சிகளை தி.மு.க'வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நிர்பந்திக்கவில்லை. எங்களது கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்தும் நோக்கில் செய்த சதி இதுவாகும். மக்கள் மனதில் இடம்பெற்ற ஒரு சின்னத்தில் கூட்டணி கட்சிகள் போட்டியிட விரும்பினால் அதை வழங்குவது எங்கள் கடமை" என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தேர்தலில் கூட்டணி இன்றி தி.மு.க வென்றதாக இதுவரை வரலாற்றில் இல்லை அவ்வாறு இருக்கும்பட்சத்தில் கூட்டணி கட்சிகளின் அதிருப்தி காரணமாக தற்பொழுது கூட்டணி கட்சிகளை மாற்று கட்சிகளுக்கு சென்று விடாமல் இழுத்து பிடித்து வைக்கும் வேலையில் தி.மு.க இறங்கியுள்ளதாக தெரிகிறது.

Similar News