மேற்கு வங்கம், அசாமில் 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.!

நாடு முழுவதும் தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்காளம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரங்கள் ஒரு புறம் நடைபெற்று வருகிறது.

Update: 2021-04-01 02:42 GMT

மேற்கு வங்காளம் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் உள்ளிட்ட 30 சட்டமன்ற தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. அதே போன்று அசாம் மாநிலத்தில் 39 சட்டமன்ற தொகுதிகளில் 2ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்காளம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரங்கள் ஒரு புறம் நடைபெற்று வருகிறது.

அது போன்று மேற்கு வங்காளத்தில் 8 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. முதல் கட்டமாக கடந்த மாதம் 27ம் தேதி நடைபெற்றது. இதனிடையே 2ம் கட்ட தேர்தல் இன்று (ஏப்ரல் 1ம் தேதி) காலை 7 மணிக்கு தொடங்கியுள்ளது. வாக்காளர்கள் காலை முதலே வாக்குச்சாவடிக்கு வருகை புரிந்துள்ளனர். வாக்களிப்பதற்கு உற்சாகமாகவும் உள்ளனர்.

மேற்கு வங்காளத்தில் ஆட்சியை பிடிப்பது பாஜகவா அல்லது திரிணாமுல் காங்கிரஸா என்ற எதிர்பார்ப்பு நாட்டு மக்களிடையே எழுந்துள்ளது.

Similar News