ஹாத்ராஸ் சம்பவத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி போராடிய கனிமொழி.. பூங்கோதை அவமதிப்பில் மௌனம் ஏன்?

ஹாத்ராஸ் சம்பவத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி போராடிய கனிமொழி.. பூங்கோதை அவமதிப்பில் மௌனம் ஏன்?

Update: 2020-11-21 08:12 GMT

அரசியல் கட்சிகள் நாடு முழுவதும் நடக்கும் அநீதிகளை கண்டு பொங்குவதும், போராட்டங்களை முன்னெடுப்பதும் இயல்புதான். ஆனால் தி.மு.க நாட்டில் மற்ற இடங்களில் அநீதி நடந்தால் பொங்கி எழுந்து போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கண்டன குரல்கள், மேடை முழக்கங்கள், பக்கம் பக்கமாக அறிக்கைகள், ட்விட்டர் ட்ரெண்டிங்கள் என பம்பரமாய் பரபரக்கும் அதுவே தன் கட்சியிலோ, அல்லது தன் கட்சியினால் ஒருவர் பாதிக்கப்பட்டால் வெளியுலகத்திற்கு தெரியாமல் மூடி மறைக்க பார்க்கும். இப்படிப்பட்ட ஓர் மலிவான அரசியலை தி.மு.க'வை தவிர வேறு எந்த கட்சியாலும் செய்ய முடியாது என தமிழகம் அறியும்.

அந்த வகையில் நேற்று முன்தினம் தி.மு.க எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடி அருணா தி.மு.க'வின் கோஷ்டி சண்டையில் அவமானப்படுத்தப்பட்டு மற்ற ஆண்களால் காலில் விழவைக்கப்பட்டு அசிங்கப்படுத்தப்பட்டு தற்கொலை வரை உந்தப்பட்டுள்ளார்.

இவ்வளவிற்கும் பூங்கோதை ஆலடி அருணா கனிமொழி கோஷ்டி, கனிமொழியை ஆதரிக்கிறார் என்ற ஒரே காரணத்திற்கான ஸ்டாலின் கோஷ்டியான சிவ.பத்மநாபனால் பெண் என்றும் பாராமல் அவமானப்படுத்தப்பட்டார். அவர் தன்னை அரசியல் லாபத்திற்காக ஸ்டாலினுக்கு சொம்படிக்கும் அணியில் இணைத்துக்கொண்டால் இன்று தற்கொலை வரை செல்ல வேண்டிய அவசியம் இருந்திருக்காது. ஆனால் தான் ஒரு  கனிமொழி ஆதராவாளராக காட்டிக்கொண்ட காரணத்தினாலேயே இன்று தன் வாழ்க்கையை முடித்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். 

இப்படிப்பட்ட விசுவாசி ஒருவர் தற்கொலை வரை செல்லும் நிலை ஏற்பட்டும் கனிமொழி அதற்காக ஒரு ட்விட்டர் பதிவு கூட செய்யவில்லை. எங்கோ ஹாத்ரஸில் நடந்த பாலியல் வன்கொடுமைக்கு இங்கே சென்னையில் பெண்களை திரட்டி மெழுகுவர்த்தி ஏந்தி போராடிய கனிமொழி, தன்னையே நம்பி அரசியல் செய்ய வந்த பூங்கோதை ஆலடி அருணா'வை சாகட்டும் பரவாயில்லை என விட்டதில் தெரிகிறது கனிமொழி'யின் பெண்ணியம். 

இவர்களை நம்பி அரசியல் செய்யும் பெண்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது.

Similar News