கனிமொழி வருங்காலத்தில் கட்சியைப் பிடித்து விடுவாரோ? உதறலில் ஸ்டாலின் எடுக்கும் முடிவு!

கனிமொழி வருங்காலத்தில் கட்சியைப் பிடித்து விடுவாரோ? உதறலில் ஸ்டாலின் எடுக்கும் முடிவு!

Update: 2020-12-31 09:09 GMT

தி.மு.க.வில் கனிமொழிக்கு செக் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர், நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய உடல்நிலையைக் கூறி அரசியலுக்கு வருவதைத் தவிர்த்து உள்ளார். அவர் அரசியலுக்கு வந்தாலும் வராமல் சென்றாலும் கழகத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை.

ரஜினி ரசிகர் மட்டும் இல்லாமல் தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரும் எங்களுக்கு வாக்களிப்பார்கள்.திமுக தலைவர் ஸ்டாலின் அவருடைய கட்சியில் உள்ள பிரச்சினைகளை மறைக்கக் கழகத்தில் பிரச்சினை உள்ளதாகக் கூறிவருகிறார்.

திமுகவில் சீனியர்களுக்கு என்ன மரியாதை உள்ளது? பாட்டன், முப்பாட்டன், பேரன், கொள்ளு பேரன், எள்ளுப் பேரன் ஆகியோர் தான் கட்சித் தலைவராக முடியும். ஆனால் எங்கள் கட்சியில் கொடி பிடிக்கும் சாதாரண தொண்டன் உயர்ந்த பதவிக்கு ஏன் முதலமைச்சராகக் கூட வர முடியும். முதலமைச்சரும் அப்படித்தான். முதலமைச்சர் யார். சாதாரண விவசாயி. நான் யார்? டாட்டா பிர்லா பரம்பரையா? காசிமேட்டில் பிறந்தவன்.

புரட்சித்தலைவர், புரட்சித் தலைவியின் விசுவாசியாகி கொடிபிடித்து வளர்ந்தவன். அந்த கழக கொடி பிடித்த காரணத்தினால் இன்று தேசியக் கொடியுடன் வலம் வர முடிகிறது. கொடி கட்டும் நபருக்கு தான் கழகத்தில் மரியாதை. திமுகவில் வாரிசுகளுக்கு தான் மரியாதை. உதயநிதிக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள்.

தற்போது திமுக தலைவர், அவரின் தந்தை படம், பெரியார், அண்ணா படத்தைப் போடுங்கள் என்று தெரிவித்துள்ளார். இது எல்லோருக்கும் தானே பொருந்தும். அதில் உதயநிதி படத்தைப் போடலாமா. அவருக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு. இது யாருக்கு வைக்கும் செக். துரைமுருகன், பொன்முடி, கனிமொழி ஆகியோரின் படத்தைப் போடக்கூடாது என்றால் இது முழுக்க முழுக்க கனிமொழிக்கு வைத்த செக் தான்.

கனிமொழி வருங்காலத்தில் கட்சியைப் பிடித்து விடுவாரோ என்று இன்றைக்கே மட்டம் தட்டும் பணிகள் அந்த குடும்பத்தில் நடைபெற்று வருகிறது என்று கூறியுள்ளார்.

Similar News