"புதுச்சேரியில் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை" - துணைநிலை ஆளுநர் திட்டவட்டம்!

Update: 2021-04-18 04:58 GMT

புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது, கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, அந்த வகையில் கடந்த 11ஆம் தேதி முதல் தடுப்பூசி முகாம் மாநிலம் முழுவதும் 100 மையங்களில் நடைபெற்று வருகிறது, இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்த நடமாடும் தடுப்பூசி வாகனங்களை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஆளுநர் மாளிகை வாயிலில் கொடி அசைத்து இருந்து துவக்கி வைத்தார், தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரியில் கொரோனா பரவலை கட்டுபடுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாகவும், கொரோனா பரவலை கட்டுபடுத்த அனைத்து வசதிகளுடன் கூடிய நடமாடும் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் விவசாயிகளுக்கு தடுப்பூசி செலுத்த வேளாண் விற்பனை குழு வளாகத்தில் இந்த வாகனங்கள் செயல்படும் என்றும் தெரிவித்தார்.


மேலும் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருக்கும் நிறுவனங்களுக்கு வாகனங்களை அனுப்பி நடமாடும் தடுப்பூசி மையம் உருவாக்கப்படும் என்றும் தற்போது வரை புதுச்சேரி மாநிலத்தில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை, புதுச்சேரி மாநிலத்திற்கு மத்திய அரசு முதலிலேயே 1 லட்சத்து பத்தாயிரம் தடுப்பூசிகளை கொடுத்து உள்ளதாக தெரிவித்த தமிழிசை சவுந்தரராஜன், அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், கூட்டம் கூடும் இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார், டெல்லி, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் அடைப்புகள் ஆரம்பம் ஆகிவிட்டது என குறிபிட்ட அவர் புதுச்சேரி மக்கள் கொரோனா கட்டுபாடுகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால் பகுதி நேர அடைப்புகள் குறித்து சிந்திக்க வேண்டி வரும் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News