ஜிப்மர் ஆசிரியர் பணியாளர்களுக்குக் கோடை விடுமுறை ரத்து!

Update: 2021-04-20 02:00 GMT

நாடுமுழுவதும் மீண்டும் கொரோனா தொற்று நோயின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. இதனை எதிர்கொள்ள பல்வேறு மாநிலங்களில் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் கொரோனா தொற்றுநோயின் தாக்கத்தை எதிர்கொள்ள அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசிகள் போடவும் மத்திய அரசாங்கம் ஏற்பாடு செய்து வருகின்றது.


தற்போது புதுச்சேரியில் கொரோனா தொற்றின் இரண்டாம் தாக்கம் அதிகமுள்ள நிலையில், ஜவஹர்லால் முதுகலை கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்(Jipmer) 2021 ஆசிரியர்களுக்கான கோடை விடுமுறையை ரத்து செய்துள்ளது. இதுகுறித்த சுற்றறிக்கையை Jipmer இயக்குநர் ராகேஷ் அகர்வால் திங்கட்கிழமை அன்று வெளியிட்டார்.

"ஏப்ரல் 16 முதல் விடுமுறையில் உள்ளூரில் உள்ள அனைத்து ஆசிரியர் பணியாளர்கள் உடனடியாக பணிக்குத் திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் வெளி ஊருக்குப் பயணம் மேற்கொண்டவர்களும் உடனடியாக வந்தவுடன் பணிக்குச் சேர வேண்டும்," என்று அகர்வால் கூறியிருந்தார்.


இந்நிறுவனம் முன்னர் கோடை விடுமுறையைப் பாதியாகக் குறைத்தது, ஆனால் தற்போது புதுச்சேரியில் கொரோனா தொற்றின் நிலைமை மோசமாவதைக் கருத்தில் கொண்டு கோடை விடுமுறையை முழுமையாக ரத்து செய்துள்ளது.

source: https://timesofindia.indiatimes.com/city/puducherry/covid-19-surge-jipmer-cancels-summer-vacation-of-faculty-members/articleshow/82143027.cms

Similar News