புதுச்சேரியில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளுடன் அமலாகிறது இரவு நேர ஊரடங்கு.!
கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் இன்று இரவு 10 முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்குக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் உணவகங்கள் அனைத்தும் இரவு 8 மணிக்கு அடைக்கவேண்டும் என்றும் மற்றும் தடை செய்யப்பட்ட நேரத்திற்குப் பின்பு பார்சல் சேவை மட்டும் வழங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ள கடற்கரைச் சாலை மாலை 5 மணி மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் திங்கட்கிழமை அன்று யூனியன் பிரதேசத்தில் கொரோனா தொற்றால் இறப்பு சதவீதம் 1.5 சதவீதமாகவும் மற்றும் இது 1.2 தேசிய சதவீதத்தை விட அதிகமாகும். புதுச்சேரி தலைமையகத்தில் அதிகபட்சமாக 572 இறப்புகள் பதிவாகியுள்ளது, காரைக்காலில் 84 பெரும் யாணம் பகுதியில் 45 மற்றும் மஹே தொகுதியில் 12 பேரும் பதிவாகியுள்ளது.
மேலும் புதுச்சேரியில் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 88.8 சதவீதமாகும், இது தேசிய குணமடைந்தவர்கள் சதவீதம் 86 விட அதிகமாகும். திங்கட்கிழமை அன்று புதிதாகப் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை புதுச்சேரியில் 565 ஆகவும், மொத்த எண்ணிக்கை 4,692 ஆகவும் உள்ளது. 365 பேர் திங்கட்கிழமை அன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சுகாதார அமைச்சகம் 7.33 லட்ச மாதிரிகளைச் சேகரித்துள்ளது, அதில் 6.66 மாதிரிகள் கொரோனா நெகடிவ் என்று வந்துள்ளது. மேலும் புதுச்சேரியில் பாதிக்கும் மேற்பட்டோர் பரிசோதனை செய்து கொண்டனர். புதுச்சேரியில் மொத்த மக்கள் தொகை 14 லட்சமாகும். மேலும் இதுவரை 1.55 லட்சம் மக்களுக்குத் தடுப்பூசி வழங்கியுள்ளது.
source: https://www.daijiworld.com/news/newsDisplay?newsID=825624