புதுச்சேரி: ஏழைகளுக்கு உணவு வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்தினார் தமிழிசை சௌந்தர ராஜன்!

Update: 2021-05-12 06:23 GMT

செவ்வாய்க்கிழமை அன்று புதுச்சேரியில் லெப்டினென்ட் கவர்னர் தமிழிசை சௌந்தர ராஜன், கொரோனா தொற்றுநோய் காலங்களில் ஏழை மக்களுக்கு பொன்லைட் விற்பனை நிலையங்களில் மானிய விலையில் உணவு வழங்கும் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தினார்


இந்த முயற்சியானது கடந்த மாதம் ஏழை மக்களுக்கு உதவும் வகையில் நான்கு நிலையங்களில் உணவு பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டது.

இந்த தொற்றுநோய் காலத்தில் அதிகம் தேவையில் உள்ள மற்றும் வறுமையில் உள்ளவர்களுக்குச் சென்றடையும் நோக்கில் மேலும் 20 நிலையங்களில் இது செய்லபடுத்தபடவுள்ளது என்று ராஜ் நிவாஸில் இருந்து வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டமானது புதுச்சேரியில் ரயில் நிலையத்துக்கு அருகே உள்ள பொன்லைட் நிலையத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

சுகாதார முறையில் தயாரிக்கப்பட்ட இந்த சத்தான உணவுகள் ஐந்து ரூபாய்க்கு பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகின்றது. புதுச்சேரி ரயில் நிலையத்தில் உள்ள பொன்லைட் நிலையத்தில் தொடங்கியவுடன் 1000 பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

தேவைகளைக் கருத்தில் கொண்டு புதன்கிழமை முதல் 2000 பாக்கெட்கள் விநியோகிக்கப்படும் என்று அந்த செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்த துவக்க நிகழ்ச்சியில் பொன்லைட் நிர்வாக இயக்குநர் T சுதாகர் மற்றும் பிற பொன்லைட் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

source: https://www.thehindu.com/news/cities/puducherry/l-g-launches-initiative-to-expand-meal-scheme-for-the-poor/article34537870.ece

Similar News