கொரோனா சிகிச்சைக்குத் தனியார் மருத்துவக் கல்லூரிகளைப் பயன்படுத்தப் புதுச்சேரி அரசு முடிவு!
புதுச்சேரியில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்ற கொரோனா தொற்றின் இரண்டாம் அலையை முன்னிட்டு இந்திரா காந்தி அரசு மருத்துவ மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஜவஹர்லால் முதுகலை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் மையமாக மாறியதைத் தொடர்ந்து, யூனியன் பிரதேசத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளை கொரோனா சிகிச்சை மாற்றக் கையகப்படுத்தவுள்ளதாகப் புதுச்சேரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
புதுச்சேரி லெப்டினென்ட் ஆளுநர் உத்தரவின் பெயரில், சுகாதார அமைச்சகத்தின் கீழ் உள்ள நான்கு புதுச்சேரி மருத்துவக் கல்லூரி கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து மற்றும் வெளியேற்றும் மையமாக விரைவில் மாற்றவுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த நான்கு மூன்று வாரங்களாக கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால் IGGMC&RI மற்றும் JIPMER மருத்துவ வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் கடந்த சில நாட்களாகப் படுக்கை வசதிகளும், ஆக்சிஜென் இருப்பும் குறைந்துள்ளது.
"அந்த நான்கு மருத்துவக் கல்லூரிகளும் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தால், கொரோனா நோயாளிகளின் சேர்க்கையை அதிகரிக்க உதவும். அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் 700 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்படும். சுகாதார அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட நோடல் அதிகாரி, மருத்துவக் கல்லூரிகளில் கொரோனா நோயாளிகளின் சேர்க்கை மற்றும் வெளியேற்றுவது குறித்துக் கண்காணிப்பார்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனோடு IGGMC&RI யில் கூடுதலாக 50 ஆக்சிஜென் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்து தரப்படும் என்றும் குறிப்பிடப்பட்டது.
source: https://www.thehindu.com/news/cities/puducherry/puducherry-government-to-take-over-private-medical-colleges-for-covid-19-treatment/article34563839.ece