புதுச்சேரியில் மேலும் ஒருவாரத்திற்கு ஊரடங்கு - விலக்கு யாருக்கு?

Update: 2021-05-31 07:50 GMT

கொரோனா தொற்றின் இரண்டாம் அலையால் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஜூன் 7-ஆம் தேதி நாளிரவு வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. முதலில் மே 10 ஊரடங்கு விதிக்கப்பட்டு மே 24 வரை நீட்டிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து மீண்டும் மே 31 வரை நீட்டிக்கப்பட்டது.


தற்போது அது மீண்டும் ஜூன் 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று சனிக்கிழமை அன்று லெப்டினென்ட் கவர்னர் தமிழிசை சௌந்தர ராஜன் தெரிவித்தார். அத்தியாவசிய தேவைகளுக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மாலை 5 மணி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஊரடங்கு நாட்களில் பழுது பார்ப்பது, பிளம்பிங், நீர் சுத்திகரிப்பு, வாகனம் பராமரித்தல் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கான தனிப்பட்ட தொழில்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதுச்சேரியில் 18 வயது மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்த கோவிட்ஷீயீல்டு மருந்தை வாங்க 1.05 கோடிக்கு ஒப்புதல் அளித்துள்ளார். மேலும் கருப்பு பூஞ்சை நோயைக் குணப்படுத்த வாங்கும் மருந்துக்கு 2.83 லட்சத்துக்கும் வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.


மேலும் இந்த கொரோனா தொற்று காலத்தில் இரண்டாவது அலையைச் சமாளிக்கக் குறுகிய கால 214 சுகாதார பணியாளர்களை நியமிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரியில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவின் கீழ் வீட்டுத்திட்டங்களைச் செயல்படுத்த 4.52 கோடியை அனுமதிக்க அவர் ஒப்புதல் அளித்தார்.

Source: News 18

Similar News