வரலாற்றில் முதன் முறையாக புதுவை சட்டப்பேரவை தலைவர் பதவியில் பா.ஜ.க!

Update: 2021-06-03 04:45 GMT

புதுவையில் பா.ஜ.க-விற்கு சட்டப்பேரவைத் தலைவர் பதவி அளிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 33 இடங்களில் 30 இடங்களுக்கானத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பெரும்பான்மை இடங்களை பெற்று என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.

இந்நிலையில், மாநில சட்டப்பேரவையில் சுயேட்சை எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு மற்றும் நியமன எம்.எல்.ஏ-க்கள் மூலம் பா.ஜ.க-வின் பலம் 12-ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், எம்.எல்.ஏ நமச்சிவாயம், புதுச்சேரி மாநில பா.ஜ.க தலைவர் சாமிநாதன் தலைமையில் அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்துக் கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க மாநில தலைவர் சாமிநாதன், புதுச்சேரி மாநில சட்டப்பேரவைத் தலைவர் பதவி பா.ஜ.க-விற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அமைச்சரவை இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இரண்டு மூன்று நாள்களில் அமைச்சரவை பதவியேற்கும் எனவும் தெரிவித்தார்.

Similar News