புதுச்சேரி: அமைச்சர்களுக்குப் பதவி ஒதுக்கீடு செய்வதை விரைவுபடுத்த முதல்வருக்கு ஆளுநர் கோரிக்கை!

Update: 2021-07-11 08:03 GMT

புதுச்சேரியில் N ரங்கசாமி தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சர்களுக்கு இன்னும் இலாக்காக்கள் அமைக்கப்படாத நிலையில் அந்த பணியை விரைவுபடுத்துமாறு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் முதலமைச்சருக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.


"நான் அரசியலில் தலையிட விரும்பவில்லை. ஆனால் இந்த மாநிலத்தின் அக்கறை கொண்ட ஒரு நபராக, அமைச்சரவையில் ஆரோக்கியமான செயல்பாடுகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற எனது விருப்பத்தை முதலமைச்சருக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்" என்று Dr.தமிழிசை தெரிவித்தார்.

ஜூன் 27 இல் ஐந்து அமைச்சர்கள் பதவியேற்று 13 நாட்கள் கடந்து விட்டன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால், அவர்களுக்கு இன்னும் இலாக்காக்கள் அமைக்கப்படாத நிலையில், அவர்களுக்குக் குறிப்பிட்ட வேலைகள் எதுவும் இல்லை.

மேலும் சுற்றுலா அமைச்சருடன் கலந்துரையாடி புதுச்சேரியைச் சிறந்த சுற்றுலா தளமாக மாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். கடந்த மூன்று மாதங்களில் ஜனாதிபதி ஆட்சியின் போது புதுச்சேரியை மேம்படுத்த ஒரு திட்டம் வகுக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டார்.

அதன் மூலம் அதிக வேலைகள் உருவாக்கப்படுகின்றன. புதுச்சேரி விமான நிலையத்தை மேம்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். செயல் திட்டங்களை உருவாக்கவும் தலைமைச் செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி முதலமைச்சர் தொழில்துறை முதலீட்டாளர்களுடன் சந்திப்பை நடத்தி வருகிறார், கொரோனா தொற்றுக்குப் பிறகு வளர்ச்சி திட்டங்கள் முழுமையாகச் செயற்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


உலக சுகாதார மையம் மூன்றாவது அலை குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது, இருப்பினும் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் அது குறித்து அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.

Source: New Indian Express

Similar News