உள்ளாட்சி தேர்தலை சந்திக்க பா.ஜ.க. தயாராக உள்ளது !

Update: 2021-10-29 17:35 GMT

புதுவையில் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க பா.ஜ.க. தயாராக உள்ளது என தேசிய பொதுச்செயலாளர் புரந்தேஸ்வரி கூறினார். இது குறித்து அவர் பேசியதாவது : 

பிரதமர் மோடி தலைமையில் நாடெங்கும் நல்லாட்சி நடந்துகொண்டிருக்கிறது. புதுச்சேரியை பொறுத்தவரை, கடந்த தேர்தலில் 2 சதவீதமாக இருந்த பா.ஜ.க.வின் வளர்ச்சி தற்போது 25 சதவீதமாக உயர்ந்துள்ளது.

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க பா.ஜ.க. தயாராக உள்ளது. பா.ஜ.க.வின் வெற்றிக்கு தொண்டர்களும், நிர்வாகிகளும் இணைந்து செயல்படுவார்கள். 

Daily Thanthi


Similar News