கொரோனா தடுப்பூசி போடும் மக்களுக்கு பல்வேறு பரிசுகள்: புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தகவல்!
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதிலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் மக்களுக்கு அரிசி, மற்றும் மளிகை பொருட்களை வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறோம் என்று உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதனும், உள்துறை அமைச்சர் நமச்சிவாயமும் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கவனம் செலுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் நமச்சிவாயம், கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட பரிசுகளை தந்து ஊக்கப்படுத்தி வருகிறோம். மேலும், வயதானவர்கள் தடுப்பூசி போடுவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். அவர்களையும் சமாதானம் செய்து தடுப்பூசி போடுவதற்கு அரசு முயற்சிகள் மேற்கொள்ளும். அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திய மாநிலமாக புதுச்சேரி வரும் என்றார்.
அதன் பின்னர் பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் பேசும்போது, கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது நாராயணசாமி மட்டுமே டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்திப்பார். ஆனால் மற்ற அமைச்சர்கள் டெல்லிக்கு செல்ல மாட்டார்கள். ஆனால் தற்போது அப்படி இல்லை, புதுச்சேரி அமைச்சர்களும் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து மக்கள் திட்டங்கள் குறித்து பேசுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
Source, Image Courtesy: Hindu Tamil