கடல் அரிப்பால் இடிந்து விழுந்த பாலம்: களத்தில் இறங்கிய ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்!

Update: 2022-03-06 10:12 GMT
கடல் அரிப்பால் இடிந்து விழுந்த பாலம்: களத்தில் இறங்கிய ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்!

வங்க கடலில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த நிலை காரணமாக கடலில் திடீரென்று அதிகளவு அலை ஏற்பட்டு, பழைய துறைமுகத்தை இணைக்கும் பாலம் இடிந்து விழுந்தது.

புதுச்சேரி நகரம் கடற்கரையால் சூழ்ந்துள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்வது புதுச்சேரி கடற்கரையும் ஒன்று சொல்லலாம். அதே போன்று கடற்கரைக்கு வருபவர்கள் பழைய துறைமுகம் பாலத்தின் மீது புகைப்படம் எடுத்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், கடல் சீற்றத்தால் பாலம் திடீரென்று இடிந்து விழுந்தது. இதனை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உடனடியாக ஆய்வு செய்தார். இது பற்றி அவரது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: வங்க கடலில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தநிலை காரணமாக கடலில் ஏற்பட்ட அதிகளவில் கடல் அலையினால் புதுச்சேரி பழைய துறைமுகத்தில் இடிந்து விழுந்த இணைப்பு பாலத்தை ஆய்வு செய்து பாலத்தை சீரமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துறைமுக அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டேன். இவ்வாறு அவரது ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News