புதுச்சேரியில் பா.ஜ.க. ஆட்சியை பிடித்தது போன்று தமிழகத்திலும் ஆட்சி அமைப்போம்: வானதி சீனிவாசன்!

Update: 2022-03-26 08:46 GMT
புதுச்சேரியில் பா.ஜ.க. ஆட்சியை பிடித்தது போன்று தமிழகத்திலும் ஆட்சி அமைப்போம்: வானதி சீனிவாசன்!

புதுவையில் பாஜக ஆட்சியை பிடித்ததை போன்று தமிழகம், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் பாஜ ஆட்சி அமைக்கும் என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

புதுவையில் பாஜக மகளிர் தேசிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு கூறியதாவது: புதுவையில் பாஜக தேசிய மகளிரணி நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் நாடு முழுவதும் இருந்து மகளிர் நிர்வாகிகள் வருகை தருவர். இதில் மகளிருக்காக மத்திய அரசு ஏற்படுத்தியுள்ள நலத்திடங்கள் அதில் உள்ள பலன்கள் பற்றி பேசப்படும்.

மேலும், தென்னிந்தியாவில் கர்நாடகாவிற்கு பின்னர் புதுச்சேரியிலும் பாஜக ஆட்சியை பிடித்திருப்பது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. இதே போன்று தமிழகம், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் ஆட்சியை பிடிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News