ஆரோவில்லில் போதை பொருள் புழக்கம், அனுமதி இல்லாத வெளிநாட்டவர் - எச்சரிக்கும் ஆளுநர் தமிழிசை

Update: 2022-05-29 12:34 GMT

ஆரோவில்லில் விசா, பாஸ்போர்ட் இல்லாமல் தங்கியிருப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நிர்வாகக்குழு உறுப்பினரும் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், போதைப்பொருட்கள் போன்ற நடமாட்டங்கள் எல்லாம் இருக்கிறது. இது பற்றி சட்டரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும், ஆரோவில் பெரிய ஏரியாகவாக உள்ளது. 50 ஆயிரம் பேர் இருக்க வேண்டிய இடத்தில் 3 ஆயிரம் பேர்தான் உள்ளனர். ஆகவே இருக்க வேண்டிய நபர்கள் இல்லாமலும், காலி இடங்கள் நிறைய இருப்பதனாலயும் இதில் பல நடவடிக்கைகள் இருக்கலாம். ஆனால், அதுதான் நடைபெறுகிறது என்று சொல்லவில்லை. நல்லதும் நடைபெறுகிறது. உடனே அது மட்டும்தான் நடைபெறுகிறது என நீங்கள் செய்தி போட்டு விடாதீர்கள் என்றார்.

போதைப்பொருள் எந்த வகையில் கட்டுப்படுத்த வேண்டுமோ அதற்கான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமோ அந்த வகையில் நாங்கள் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். அதில் நடைபெற்ற எண்ணிக்கைகள் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. தற்போது கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News