உறவினருக்கு இடம் கேட்டு அமர்ந்திருந்த பெண்ணை எழுப்பிய காவலர்: வீடியோ எடுத்த வாலிபரின் செல்போன் பறிக்க முயற்சி!
புதுச்சேரி பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணை, போலீஸ் ஒருவர் தனது உறவினர் அமர்வதற்காக வலுக்கட்டாயமாக பெண்ணை எழச் செய்துள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு செல்லவிருந்த குளிர்சாதன பேருந்தில் இருந்த ஒரு பெண்ணின் கணவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதனை கவனித்த வாலிபர் ஒருவர் வீடியோ எடுத்திருந்தார். அதனை பார்த்த போலீஸ் செல்போனையும் பறிக்க முயற்சி செய்தார்.
இதனை தொடர்ந்து பெண் மற்றும் அவரது கணவர், வீடியோ எடுத்த வாலிபர் ஆகிய மூன்று பேரையும் போலீஸ் முருகேசன் காவல் நிலையம் அழைத்து சென்றார். அங்கு இருந்த இன்ஸ்பெக்டர் சமரசம் பேசி மூன்று பேரையும் அனுப்பி வைத்தார். உறவினருக்காக இருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணை எழச்செய்த போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Polimer