செஸ் ஒலிம்பியாட்டில் பிரதமர் படம் கட்டாயம் இடம்பெற வேண்டும் - ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்!
சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளது. அது போன்ற இடங்களில் நாட்டின் அடையாளமான பிரதமர் மோடியின் படம் இடம்பெறாதது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது என்றும், இதனை முதலமைச்சர் ஸ்டாலின் கவனித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
Immensely honoured in mounting names of freedom fighters on "Thiyaga Perunjuvar"(tribute wall for freedom fighters) at Gandhi Thidal #Puducherry.
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) July 27, 2022
I am sure that this will inculcate a sense of patriotism & pride of being Indian among children & adults alike.#AzadiKaAmrtiMohotsav pic.twitter.com/qDmnWU2D2b
இந்திய நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி கடற்கரையில் அமைக்கப்பட்டு வரும் தியாகச்சுவரில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை வேலு நாச்சியாரின் பெயர் பலகையை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று (ஜூலை 27) பதித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: சென்னை, மாமல்லபுரத்தில் தேசிய உணர்வோடு நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் இடங்கள் அனைத்திலும் பிரதமர் மோடியின் படம் இடம்பெற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஆளுநர் தமிழிசை கூறினார்.
Source: Polimer
Image Courtesy: Twitter