மதப் பிராச்சாரத்தை தடுத்து நிறுத்தியவர்கள் மீது பொய் வழக்கு! கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட இந்து முன்னணியினர்!

Update: 2022-08-06 05:42 GMT

காரைக்கால்: கிறிஸ்தவ மதப் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியவர்கள் மீது, காவல்துறையினர் பொய் வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


காரைக்கால் மாவட்டம் அன்பு நகர் பகுதி பொது மக்களிடம், "வியாதிகளே மனுஷனுக்கு வருத்தம், குடும்ப சண்டைகள் மனுஷனுக்கு வருத்தம், இப்படி பல வருத்தங்கள் நிறைந்த இந்த உலகத்தில் இயேசு சொல்கிறார், வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே அனைவரும் என்னிடம் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" என்று ஆர்வத்துடன் மைக்கை பிடித்து, ஒரு நபர் தீவிர மதப் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார்.


உடனடியாக அந்த ஊர் பொது மக்களில் ஒருவர், மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அந்த நபரிடம் சென்று "இங்கே யாரும் இளைப்பாறல! எல்லாரும் இளைப்பாறிக் கொண்டு தான் இருக்கின்றனர்! இங்கே இருக்கிறவர்கள் அனைவரும் இந்துக்கள் தான், நீங்கள் கிறிஸ்தவர்கள் இருக்கும் இடத்தில் சென்று இந்த பிரச்சாரத்தை மேற்கொள்ளுங்கள்" என்று தடாலடியாக அந்த மதப்பிரச்சாரம் செய்த நபரிடம் கூறியுள்ளார்.


இச்சம்பவம் அறிந்த இந்து முன்னணி அமைப்பினர், மதப்பிரச்சாரம் செய்தவர்களை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Thamarai tv


இந்நிலையில் மதப் பிரச்சாரம் செய்தவர்களை தடுத்து நிறுத்திய காரணத்தால், இந்து இயக்கத்தினர்  மீது காவல்துறையினர் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து காரைக்கால் காவல்துறையை கண்டித்து, காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, இந்து முன்னணி மற்றும் பரிவார் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Hindu munnani

Tags:    

Similar News