விவசாயிகளின் வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்படுமா? புதுச்சேரி அரசின் முடிவு!

Update: 2023-06-25 04:00 GMT

விவசாயிகளின் வேளாண் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கையை அரசு விரைவில் நிறைவேற்றும் என்று கூறப்பட்டு இருக்கிறது. காரைக்கால் நிர்வாகம் மற்றும் வேளாண்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் காமராஜர் அரசு வளாகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அரசு தரப்பில் மாவட்ட கலெக்டர் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். பல முக்கியமான அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்று இருக்கின்றார்கள்.


கூட்டத்தில் முக்கியமான கோரிக்கையாக வெள்ள நிவாரண நிதி உதவி இன்னும் அளிக்கப்படவில்லை. எனவே அவற்றை உடனடியாக அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப் பட்டிருக்கிறது. வெள்ள நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். பருத்திக்கான விலையை அரசு உயர்த்தி தரவேண்டும்.


நிலுவையில் உள்ள விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு ரூ.11 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்தார்கள். எனவே அவற்றை விரைவாக செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News