புதுச்சேரி கதிர் கிராமத்தில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ கல்லூரிக்கு தேசிய மருத்துவ ஆணையத்திடமிருந்து அங்கீகாரம் கிடைப்பதில் தாமதம் நிலவி வந்த நிலையில், நேற்று மாலை இந்த ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரியில் MBBS 180 இடங்கள் உள்ளன. இதில் புதுவை மாணவர்களுக்கு 130 இடங்களும் மற்றும் மாணவர்களுக்கு இதர இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.
புதுச்சேரி அரசு நிர்வாகம் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கோரி தேசிய மருத்துவ ஆணையத்திடம் விண்ணப்பித்து உள்ளது. ஆனால் கண்காணிப்பிற்கு வந்த தேசிய மருத்துவ ஆணையம் கல்லூரியில் போதுமான அளவில் வசதிகள் இல்லை. குறிப்பாக கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பயோமெட்ரிக் வருகை குறிப்புகள் ஆகியவை இடம்பெறாத காரணத்தினால் அனுமதியை நிராகரித்தது. தற்போது அவற்றை பெறுவதற்காக மீண்டும் அரசு தரப்பில் முயற்சிகளையும் மேற்கொள்ளப்பட்டன. அதன் பெயரில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
அதுமட்டுமல்லாத தேசிய மருத்துவ ஆணையம் அங்கீகாரத்தை வழங்கி ஐந்து ஆண்டுகள் அங்கீகாரத்தை நீடிப்புதாக உறுதி அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து மாணவர்கள் சேர்க்கை ஆரம்பிக்கப்படும் என தெரிய வருகிறது. இது பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Input & Image courtesy: News