சமூக நீதி தேவைக்காக பொது சிவில் சட்டம்... புதுச்சேரி ஆளுநர் தமிழிசையின் நச் பதில்..
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே அரிகேசவநல்லூரில் உள்ள அரியநாதர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காக தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று நெல்லை வந்தார். அவருக்கு வண்ணார்பேட்டை சுற்றுலா மாளிகையில் மாநகர காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் அவருக்கு மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோர் வரவேற்று அவரை விழாவிற்குள் சிறப்புரையாற்ற அழைத்தார்கள். பின்னர் நிகழ்ச்சி நிறைவின் போது பத்திரிகையாளர்களுடன் அவர் உரையாற்றினார்.
அப்பொழுது அவர் கூறும் பொழுது அனைவருக்கும் ஆக சமூக நீதி என்பது காக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான், தற்போது பொது சிவில் சட்டம் கொண்டு வர அவசியம் ஏற்பட்டு இருக்கிறது. மத்திய அரசை பிடிக்காதவர்கள் இந்த ஒரு சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று தடுக்கிறார்கள். ஆனால் உண்மையில் இது சமூக நீதியை நிலைநாட்டும் ஒரு செயலாக பார்க்கப்படுகிறது.
ஒரு வீட்டில் 4 நபர்கள் இருந்தால் தனித்தனியாக அவர்களுக்கு சட்டம் இருக்க முடியாது. அதனாலேயே அனைவருக்கும் சமமான பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படுகிறது. டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இந்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார் என்று கூறியுள்ளனர்.
Input & Image courtesy: News