மத்திய நிதி அமைச்சர் புதுச்சேரிக்கு வருகை.. முதல்வர் விடுத்த முதல் வேண்டுகோள்...

Update: 2023-07-09 06:41 GMT

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று புதுச்சேரி வந்தார். கவர்னர் மாளிகையில் அவரை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் மற்றும் பல்வேறு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் இந்திய மிச்சர் தலைமையிலான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த நிதி ஆய்வுக் கூட்டத்தில் பல்வேறு தரப்பில் வாதங்கள் நடைபெற்றது. கூட்டத்தில் புதுவையின் நிதி நிலைமை குறித்து ஆலோசிக்கப்பட்டது.


தொடர்ந்து அரசு சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், அதற்கு தேவையான நிதி குறித்து அரசு செயலாளர்கள் விளக்கி கூறினார்கள். மேலும் நிதி இல்லாததால் முடங்கியுள்ள திட்டங்கள், அரைகுறையாக விடப்பட்டுள்ள கட்டுமான பணிகள், மேம்பாட்டு பணிகள் தொடர்பாகவும் எடுத்துரைக்கும் பணி நடந்தது. அதுமட்டுமில்லாத பின்பு முதல்வர் ரங்கசாமி அவர்கள் உரையாற்றினார்


அப்பொழுது முதல் அமைச்சர் சார்பில் கோரிக்கை ஒன்று வைக்கப் பட்டிருக்கிறது. புதுவை யூனியன் பிரதேசத்தை 16-வது நிதிக்குழுவில் சேர்க்கவேண்டும். இதற்கு தேவையான அரசியலமைப்பு சட்ட திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். புதுவையை மாநிலமாகவோ, யூனியன் பிரதேசமாகவோ கருதி சிறப்பு நிதியுதவியையும் அளிக்க வேண்டும் என்று கோரிக்கையை முதல்வர் முன்வைத்து இருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News