புதுச்சேரி: காவலர்களுக்கு மனநல பயிற்சி வகுப்பு... தற்கொலை எண்ணத்தை தடுக்குமா...

Update: 2023-07-10 04:51 GMT

காவல்துறை பணி என்றாலே எப்பொழுதும் சமுதாயத்திற்காக சமுதாய பிரச்சனைகளுக்காக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு பணி என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக காவல்துறையில் இருக்கும் காவல் அதிகாரிகள் பலர் மன அழுத்தத்தில் இருப்பார்கள். பெரும்பாலும் காவலர்களாக தொடக்க நிலையில் இருக்கும் அதிகாரிகள் தான் பெரும்பாலான மன அழுத்தத்திற்கு ஆள அவர்கள் என்று அர்த்தம் கிடையாது உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகள் கூட மன அழுத்தத்தில் இருக்கிறார்கள் என்று ஆய்வு கூறுகிறது.


அந்த வகையில் தமிழகத்தில் சமீபத்தில் மன அழுத்தத்தின் காரணமாக கோவை சரக டிஐஜி விஜயகுமார் அவர்கள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். எனவே இவற்றை தடுக்கும் நோக்கில் புதுச்சேரி அரசு மணல் நலத்துறை மற்றும் தேசிய மனநல திட்டத்தின் சார்பில் போலீஸ் யாருக்கு மனநிலை பயிற்சி வகுப்புகள் நேற்று நடைபெற்றது.


கோரிமேடு காவலர் பயிற்சி பள்ளியில் நடந்த இந்த பயிற்சி வகுப்பில் மனநல ஆலோசகர் ராஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார். போதை தடுப்பு, மனச்சோர்வு, பதற்றம், மன அழுத்தத்தை எவ்வாறு கையாளுவது, தற்கொலை எண்ணங்களை கண்டறிந்து எவ்வாறு தடுப்பது என்பது தொடர்பாக போலீசாருக்கு பயிற்சி அளித்தார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News