புதுச்சேரி: மின்விளக்குகளை ஏந்தி பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் ஊர்வலம்..
இந்தியா, பிரான்ஸ் தேசிய கொடிகளுடன் மின்விளக்குகளை கையில் ஏந்தி பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் ஊர்வலம் நடத்தினர். நேற்று பிரான்ஸ் குடியுரிமை பெற்ற நாளாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பிரான்சில் இருந்து புதுச்சேரியில் குடியுரிமை பெற்றவர்கள் நேற்று இந்த ஒரு நிகழ்ச்சியை சிறப்பாக கொண்டாடி இருக்கிறார்கள். பாரீஸ் நகர் 1789-ம் ஆண்டு ஜூலை 14-ந் தேதி பிரான்ஸ் நாட்டில் இருந்த மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து மக்களாட்சியை நிறுவினர்.
இந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் பிரான்ஸ் நாட்டு தேசிய தினமாகக் கொண்டாடப்படுகிறது. அந்த காலத்தில் மின்சாரம் இல்லாததால் மக்கள் தீப்பந்தம் ஏந்தி புரட்சி செய்து வென்றனர். இதனை நினைவு கூறும் விதமாக பிரான்ஸ் நாடு முழுவதிலும், பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் வாழும் அனைத்து நகரங்களிலும் ஜூலை 13-ந் தேதி மின் விளக்குகளை கையில் ஏந்தி ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். இந்த ஒரு நிகழ்ச்சி தான் நேற்று முன்தினம் புதுச்சேரியில் நடந்திருக்கிறது.
புதுச்சேரி மாநிலத்தில் மாலை வண்ண விளக்குகளை கையில் ஏந்திய படி பிரெஞ்சு மக்கள் ஊர்வலமாக சென்றனர். கடற்கரை சாலையில் டூப்ளே சிலை அருகில் தொடங்கிய இந்த ஊர்வலத்தை புதுச்சேரி-பிரெஞ்சு துணைத்தூதர் தொடங்கி வைத்தார்.
Input & Image courtesy: News