புதுச்சேரி: சரித்திரம் மறக்காத காமராஜர்.. முதலமைச்சர் ரங்கசாமி பகிர்ந்த உருக்கமான தகவல்..

Update: 2023-07-17 03:10 GMT


புதுச்சேரி அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பாக ஆண்டுதோறும் காமராஜர் பிறந்தநாள் விழா மாணவர் நாள் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக காமராஜர் அவர்கள் கல்விக்காக பல்வேறு உதவிகளை செய்து இருக்கிறார். தொடக்கப்பள்ளி ஒவ்வொரு கிராமங்களிலும் வருவதற்கு ஆணிவேராகவும் இருந்து இருக்கிறார். எனவே அவருடைய பிறந்தநாள் போது புதுவை கருவடிக்குப்பத்தில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தில் மாணவர் நாள் விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.


இந்த ஒரு நிகழ்ச்சியில் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் சிறப்புயாற்றினர். புதுச்சேரி சபாநாயகர் மற்றும் கல்வித்துறை அமைச்சர்கள் அதிகாரிகள் பலரும் இந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். தொடர்ந்து பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகளும், கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் ரங்கசாமி, " தற்போது மாணவர்களின் கல்வி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நம் வாழ்க்கையில் அடிப்படை தேவை கல்வி தான். அன்று சீருடை இல்லாமல் பள்ளிக்கு வராமல் போன பல பேர் இருக்கிறார்கள். ஆனால் இன்று அனைத்து குழந்தைகளும் பள்ளிக்கு செல்கிறார்கள் அதற்கு முதல் படியை அமைத்துக் கொடுத்தவர் பெருந்தலைவர் காமராஜர்" என்று உருக்கமான குறிப்பிட்டிருந்தார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News